Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - 626202, விருதுநகர் .
Arulmigu Mariamman Temple, Irukkangudi - 626202, Virudhunagar District [TM035702]
×
Temple History

தல வரலாறு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கண்குடி என்னும் இவ்வூர் முற்காலபாண்டியர் காலத்தில் (கி.பி.7-9ம் நூற்றாண்டு) வரலாற்றுப் பெருமை மிக்க ஊராகும்.இருப்பைக்குடி என்ற பழம் பெயரே இன்று இருக்கண்குடி என மருவி வழங்குகிறது.இருப்பைக்குடி கிழவன் என்னும் பெயரில் இவ்வூரில் வாழ்ந்த ஓர் தலைவன் இவ்வூரைச் சுற்றிலும் பல குளங்களை வெட்டி பழங்கரைகளை உயர்த்தி கல்பரப்பி வலிமையாக்கி அணைகளாகத் தடுத்து பல நீர்ப்பாசனப் பணிகளைச் செய்துள்ளான்.இத்தகைய சிறப்புப் பெற்ற இவ்வூரில் அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறு ஆகிய இரு நதிகளின் இடையே பூ மாலை வடிவில் அமைந்துள்ள தனித்தீவில் அருள்மிகு மாரியம்மன் சிலா ரூபமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

தல பெருமை

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பாக தென் தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகிய சதுரகிரி மகாலிங்கம் மலையில் சிவயோக ஞானசித்தர் என்ற தவயோகி கடும் தவம் மேற்கொண்டு, அன்னை பராசக்தியிடம் தான் யோக நிஷ்டையாகும் (ஐக்கியம்) இடத்தில் அன்னை பராசக்தி சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்ற அரிய வரம் பெற்றார். நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் ஐக்கியமாக வேண்டும் என்ற அன்னை பராசக்தியின் வார்த்தைகளை ஏற்று அங்கிருந்து நதிகள் சங்கமம் ஆகின்ற இத்திருத்தலத்தைத் தேர்வு செய்து இவ்விடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் நாடெங்கும் ஊழிப்பிரளயம் ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் நாட்டின் பல கிராமங்கள் அழிந்தன. அந்தப் பெரு வெள்ளத்தில் ...