உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. ஆண்டு முழுவதும் இத்திருக்கோயிலிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் 350 நபர்களுக்கும் மற்ற தினங்களில் 250 நபர்களுக்கும் அன்னதானம் சாதம் சாம்பார், ரசம் மோர், பொரியல் கூட்டு ஊறுகாயுடன் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகின்றது. அன்னதானம் நடைபெறும் நேரம் பிற்பகல் 12.15 முதல் 01.15 வரை. அன்னதானக்கூடம் திருக்கோயில் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. 100 நபர்களுக்கு கட்டணமாக ரூ.3500/-ம் 250 நபர்களுக்கு ரூ.8750/-ம் 350 நபர்களுக்கு ரூ.12,250/-ம் செலுத்தி பக்தர்கள் அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம். அன்னதான கட்டளைக்கு ரூ.50,000/- முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள்,பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் ,இவைகளின் ஏதேனும் ஒரு நன்னாளில் 200 நபர்களுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமானவரி விலக்கு 80ஜி உண்டு